book

இலக்கியத்தில் மேலாண்மை

₹1757.5₹1850 (5% off)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :574
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123431147
Add to Cart

ஏராளமான அறிஞர்களின் சிந்தனைகள், நெகிழ வைக்கும் வரலாற்று உண்மைகள், சின்னச் சின்னதாய் இனிப்பு ஊசியேற்றும் கதைகள், நுட்பமான தர்க்க வாதங்கள் என்று 600 பக்கங்களில் தடபுடல் பந்தி வைக்கும் புத்தகம்! இலக்கியத்தை பயன்படுத்திக்கொள்ளாத மேலாண்மைக்கு எந்த மதிப்பும் இல்லை. மனிதர்கள் மத்தியில் ஒற்றுமையை, நம்பிக்கையை கட்டமைக்க மேலாண்மைக்கு இலக்கியம்தான் பயன்படும் என்று பல அறிவுசார் எடுத்துக்காட்டுகள் மூலம் தெளிவுபடுத்துகிறார் வெ.இறையன்பு. திருவள்ளுவரையும் ஷேக்ஸ்பியரையும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில், இந்தப் புத்தகத்தில் மேற்கோள் காட்டியுள்ளார். இந்த இருபெரும் கவிஞர்களின் ஆளுமை இந்த நூலில் நிரம்பி உள்ளது. பல மருந்துகளை உள்ளடக்கிய ஒற்றை குப்பி போல, எட்டுத் திக்கும் சென்று அறிவுச் செல்வங்களை சேர்த்து உருவாக்கிய வாழ்வியல் பாடநூல் இது!