book

பத்தாயிரம் மைல் பயணம்

₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :302
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789388050371
Add to Cart

மனித வாழ்வில் பயணங்கள் ஏற்படுத்திய  மாற்றங்களை எண்ணிப் பார்த்தால்  பிரமிப்பாக  இருக்கும்.இருக்கிறது.அதை திரு.இறையன்புவின் வழி தரிசிக்கும்போது  அந்த ஆச்சர்யம் பல மடங்காக  விரிகிறது.தொலைநோக்கியின்  வழியே நட்சத்திர மண்டலங்களைப் பார்ப்பது போல அதே நேரம் அவை சிந்தனையையும் தூண்டுகின்றன.ஒரு நுண்ணுயிரை சூட்சம தரசினியின் மூலம் காண்பதைப் போல.அது திரு.இறையன்புவின் சொல்லிற்குள்ள வலிமை கவிதையானாலும்,கதையானாலும்,கட்டுரையானாலும் உரையாலும் ஒன்றை ஒரே நேரத்தில் விரிவாகவும் நுட்பமாகவும் சித்தரிக்கும் ஆற்றல் அவருக்குண்டு.நிறைய விவரங்களை எண்ணற்ற ஓவியங்களில்  சித்தரிக்கும் மொகலாயச் சிற்றோவியங்களை(Mughal Miniatures)போன்றது அவரது அணுகுமுறை.சுவாரசியமும் விவரிப்பும் ஒன்றுகொன்று முரணானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை கற்பனை மட்டுமல்ல  உண்மைகளும் கூட சுவாரஸ்யமாக இருக்க முடியும் அதற்கு இந்த நூலே சாட்சி.இந்தத் கட்டுரைகளை எழுத அவர் மேற்கொண்ட உழைப்பு அசாத்தியமானது வணங்கத்தக்கது அரசுப் பணியில்  ஒரு மிக உயர்ந்த பொறுப்பில் பல பணிகளை ஆற்ற வேண்டிய சூழலில்  இருந்தபோதிலும்  இதற்கென மிக முக்கியத்துவம்  கொடுத்து தேடித்தேடித் படித்து உழைத்து இந்தக் கட்டுரைகளை அவர் நமக்குத் தந்தார்.வித்தியாசமான  முயற்சிகளை வளர்தெடுப்பது என்பது "புதிய தலைமுறை"யின் நோக்கங்களில் ஒன்று "புதிய தலைமுறை"யே ஒரு வித்தியாசமான முயற்சிதான் இந்த நூல் இதுவரை  தமிழில் அதிகம் இல்லாத  வகையைச் சேர்ந்த நூல்.இதனை வெளியிடுவதில் "புதிய தலைமுறை"மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறது.