book

தலைமைப் பண்புகள் (கம்பர் காட்டியவை)

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2020
Out of Stock
Add to Alert List

பதினாறு ஆண்டுகளாகச் சென்னைக் கம்பன் கழகமும், மற்றக் கம்பள் கழகங்களும் நடத்தும் கம்பள் விழாக்களில் அவ்வப்போது கலந்துகொண்டு உரையாற்றிய அனுபவம் இருக்கிறது. அந்த அரங்கங்களில் பெரும்பாலும் கம்பரை முழுமையாகக் கற்றுணர்ந்த. கரைத்துக் குடித்த பெரியோர்கள் அமர்ந்திருப்பார்கள். நாம் ஒரு பாடலைச் சொல்லத் தொடங்குவதற்கு முன்பே முழுப் பாடலைச் சொல்லி விடுகிற நிபுணத்துவம் கொண்டவர்கள் அவர்கள். அதன் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் கம்பரை வேறுபட்ட கோணத்தில் பரிசீலனை செய்ய முடியுமா என்று சிந்தித்துத் தலைப்புகளை நான் தேர்ந்தெடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். "கம்பரும் நிர்வாகமும்', 'கம்பரும் சுற்றுலாவும்', 'கம்பரும் உடல்மொழியும்', 'கம்பரும் போர்க் கலையும்', 'கம்பரும் டார்வினும்', 'கம்பரும் உணர்ச்சி மேலாண்மையும்' என்கிற தலைப்புகளில் உரையாற்றி இருக்கிறேன். மேலாண்மை என்றால் பெரும்பாலும் மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சரக்காகவே பலர் கருதுகிறார்கள். சில தத்துவங்களை நேரடியாகச் சொல்லாமல் பாத்திரங்களின் மூலமாகவும், கதைகளின் மூலமாகவும் கூறுகிற மரபு நம்மிடம் உள்ளது. நம் இலக்கியங்களில் மேலாண்மைக் கருத்துகள் நிறைய இடம்பெற்றிருக்கின்றன என்பதை நிறுவ இலக்கியத்தில் மேலாண்மை என்கிற நூலை எழுதினேன். மாற்றி யோசிக்கின்ற மரபும் தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிறது என்பதை உணர்த்த மேலே உயரேஉச்சியிலே என்ற நூலை எழுதினேன். கம்பராமாயணம் என்கிற பல்வண்ணக் காட்சிக் கருவி (Kalaidascope) எந்தக் கோணத்தில் பார்க்கிறோம் : என்பதைப் பொருத்து அது நமக்குக் கருத்துகளை வழங்குகிறது கம்பர் காட்டுகிற தலைமைப் பண்புகளை வெளிப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் என் வாசிப்பு அனுபவத்தைக்கொண்டு மேற்கத்திய மேலாண்மை கூறுகிற தலைமைப் பண்புகள் எப்படிக் கம்பராமாயணத்தில் இடம் பெற்றிருக்கின்றன என்பதை வலியுறுத்தும் வண்ணம் ஒரு நூலை எழுத முடிவு செய்தேன். இந்த நூலை நான் விரைவில் முடிக்க பல வழிகளில் உதவியாக இருந்த நண்பர் திரு. ஜோசப் ராஜசேகான் அவர்களுக்கு என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நூல் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் மேலாண்மை மாணவர்களுக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்று. இதை ஓய்வு நேரங்களில் மேலாண்மை படிக்கும் மாணவர்கள் படித்தால் அவர்களுக்கும் இது உதவியாக இருக்கும் எனக் கருதுகிறேன். இந்த நூலை வாசித்து அணிந்துரை வழங்க வேண்டும். என்ற… தலைமைப் பண்புகள் (கம்பர் காட்டியவை) அவர். இந்த நூலையும் குறுகிய காலத்தில் கொண்டு வந்த அவருக்கு என் மளமார்ந்த நன்றி.