ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தீர்வு
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மதிவதனி
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789390811106
Add to Cartகுழந்தைகளின் உலகத்தில் அவர்கள் மட்டுமே இல்லை. அவர்களைக் கண்காணிக்கிற,கண்டிக்கிற, தண்டிக்கிற அதிகாரம் பெற்றவர்களாகப் பெரியவர்கள் இருக்கிறார்கள். அரசு, பெற்றோர், ஆசிரியர், சமூகம் என நான்கு தரப்பினரும் மாணவர்களின் எதிர்கால நலனோடு நேரடித்தொடர்பு உள்ளவர்களாக இருந்தாலும், குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொள்ளத் தவறுகிறோம்.
நம் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் மட்டுமே அவர்கள் செய்ய வேண்டிய கடமையாக வரையறுக்கிறோம். அது நிகழாதபோது அவர்களைப் பொறுப்பற்றவர்களாக, அடங்க மறுப்பவர்களாக வரையறுக்கிறோம். தங்கள் விருப்பமின்மையைத் தெரிவிக்கும் மனஉறுதி இல்லாத குழந்தைகள், பெரியவர்களின் கட்டளைக்குக் கீழ்படிந்து நடந்துகொண்டாலும், மனதளவில் பெரிய பாதிப்பை அடைகின்றனர். பெரியவர்களுக்குக் குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொள்ளத் துணை தேவைப்படுகிறது. அவர்களைக் குறைசொல்லி விலக்கி வைப்பது ஒருபோதும் தீர்வு ஆகாது. மாற்றத்தை அங்கிருந்துதான் தொடங்க முடியும்.
- சூர்யா
நிறுவனர், அகரம் ஃபவுண்டேஷன்