book

சைவமும் வைணவமும்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மகாவித்வான் கே. ஆறுமுக நாவலர்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :212
பதிப்பு :1
Published on :2022
Add to Cart

திருச்சிற்றம்பலம் சைவம் சைவம் என்னும் சொல்லின் பொருள் சைவம் என்பது சிவசம்பந்தம் உடையது எனப் பொருள்படும். அஃது உலக முதற் பொருளாகிய கடவுளைச் சிவம் எனத் தெளிந்து வழிபடும் நெறிக்குப் பெயராகி வழங்கி வருகிறது. சைவம் எனினும், சிவநெறி எனினும், சைவ சமயம் எனினும் ஒக்கும்.சிவம் என்பதன் பொருள் கடவுள், இறைவன், முதல்வன் என்றாற் போலப் பெரியோர்கள். உலக முதற்பொருளுக்கு இட்டு வழங்கிவரும் பெயர்கள், அம் முதற் பொருளின் ஒவ்வோரியல்பை நினைவூட்டும். கடவுள் என்னும் பெயர் யாவர் உணர்வையும் செயலையும் கடந்தது என, முதற் பொருளின் எட்டாத நிலையினை அறிவிக்கும் இறைவன் என்பது ! "எப்பொருளிலும் தங்குபவன் என அவன் எங்கும் உள்ள நிலைமை யைக் குறிக்கும். முதல்வன் என்பது எப்பொருட்கும் முற்பட்டு நின்று அதனைத் தொழிற்படுத்துபவன் என, எல்லாவற்றிற்கும் தான் சார்பாயிருந்து நடத்தும் வினை முதலாந் தன்மையை (பரம ஆதார. நிமித்த காரணன் ஆம் தன்மையை) உணர்த்தும். இவற்றைப் போலச் சிவம் என்னும் பெயர், முதற்கடவுள் எத்தகைய மாறுதலும் மாய்தல் இன்றித் தூய பேரின்பப் பொருளாய் அனுபவப்படும் தன்மையை உணர்த்துவதாகும். இது செம்பொருள் என்னும் சொல்லோடு ஒத்த பொருள் உடையது.முதல்வன், உலகப் பொருள்களுள் ஒன்றல்லனாய்ப் பெண், ஆண், அலியெனும் பெற்றினாய் நிற்றலின், அவன், இந்நெறிக்கண் சிவன் என ஆண்பாற் சொல்லாலும், சி வை (சிவா) எனப் பெண்பாற் சொல்லாலம், சிவம் என ஒன்றன்பாற் சொல்லாலும் ஒப்ப வழங்கப்படுதல் அறியத்தக்கது. 'பெண்ணாண் அலியெனும் பெற்றியன் காண்க' என்பது திருவாசகம்.சைவமும் வைணவமும்