book

நிகழ்த்துக் கலைகளில் உடைகளும் ஒப்பனைகளும் (மதுரை மாவட்டம்)

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் பா. சிங்காரவேலன்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :162
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789393358028
Add to Cart

நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வு நூலான இதில், மதுரை மாவட்டத்தில் நிகழ்த்துக் கலைகளை நிகழ்த்தும் கலைஞர்கள் அணியும் உடைகள், புனையும் ஒப்பனைகள் குறித்து நேரில் ஆய்வு செய்து பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.நாட்டுப்புறக் கலை வடிவங்களில் ஒன்றான நிகழ்த்துக் கலை மதுரைக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்களில் முக்கியமானதாகும். அந்த நிகழ்த்துக் கலை மட்டுமின்றி, மதுரையின் சிறப்புகள், பழந்தமிழகத்தின் கலை வரலாறு, உடை வரலாறு குறித்த ஆய்வுத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.பார்வையாளர்களிடமிருந்து கலைஞர்களை வேறுபடுத்திக் காட்டுவதற்கு ஒப்பனையும், உடைகளும் உதவுகின்றன. தமிழர்கள் தொன்றுதொட்டே ஒப்பனைக் கலையில் பயிற்சி பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை பழைமையான இலக்கிய நூல்களின் துணைகொண்டு நிறுவியுள்ளார் நூலாசிரியர். அடிப்பூச்சு, பூச்சுக்கட்டி, மென்கலவை, நெய்ப்பூச்சு, அட்டைப் பூச்சு, கைப்பூச்சு, வியர்வையை எதிர்க்கும் பூச்சு, விழிப்பூச்சு, செவ்வண்ணச் சாயம், உதட்டுச் சாயம், கண்ணிமைக் கலவை உள்ளிட்ட ஒப்பனையின் வகைகள் குறித்த தகவல்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன.