விநாயகர் விரதங்கள்
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி.பாலசுப்ரமணியன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :112
பதிப்பு :2
Published on :2017
Add to Cartஒரு மனிதனுக்கு சங்கடம் என்பது ஒன்று மனதால் வருகிறது அல்லது பணத்தால் வருகிறது. இந்த சங்கடங்கள் அகன்று சந்தோஷம் பெருக வேண்டுமானால், மூல முதற்கடவுளாம் கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
சதுர்த்தி திதி தேய்பிறையில் வந்தால் அது சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகின்றது.
இது மாசிமாதம், தேய்பிறையில், செவ்வாய்க்கிழமையோடு கூடி வரும் சதுர்த்தி திதியில் விரதம் இருக்க துவங்கி ஓராண்டு வரை தேய்பிறை சதுர்த்தியில் நிறைவு செய்யும் ஒரு விரதமாகும். அதைத்தான் ஒரு வருடம் தொடர்ந்து விரதம் என்பதில்லாமல், ஒவ்வொரு தேய் பிறையில் வரும் சதுர்த்திக்கும் சங்கட ஹர சதுர்த்தி என்று விநாயகப் பெருமானை விதிப்படி பூஜிக்கிறோம்.