பல்லக்குத் தூக்கிகள்
Pallakku Thookigal (Short Stories)
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுந்தர ராமசாமி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789380240237
Add to Cart'ஓய்ந்தேன் என்று மகிழாதே' என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் தடயங்கள் இந்தக் கதைகளில் அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன. பழக்கம் தரும் ஆசுவாசத்தைக் கால் விலங்காகக் கருதி உதறிவிட்டுப் பாதுகாப்பற்ற பாதைகளில் பயணம் செய்யும் துணிச்சல் தமிழ்ச் சூழலில் அரிது. அத்தகைய பயணத்தைக் கலை உலகில் நிகழ்த்திய மிகச் சிலரில் ஒருவரான ஒருவரான சுந்தர ராமசாமி இந்தக் கதைகளில் முற்றிலும் புதிய உலகத்தையும் கலை நோக்கையும் வெளிப்படுத்துகிறார்.