சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கண்ணன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :286
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788189359874
Add to Cartசுந்தர ராமசாமியின் காலச்சுவடு தோன்றிய காலகட்டம் முதல் நான்காம்
ஈழப்போருக்கு முந்தைய காலகட்டம்வரை காலச்சுவடில் வெளிவந்த அரசியல்
பதிவுகளின் தொகுதி இந்நூல். இந்திய அமைதிப்படையின் கோரமுகத்தை
உரித்துக்காட்டிய ‘சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும்’ கட்டுரை
காலச்சுவடு இதழ் இரண்டில் வெளிவந்து சூழலில் பல அதிவுர்களை ஏற்படுத்தியது.
உலகத் தமிழ் மாநாட்டில் தமிழ் ஈழ அறிஞர்கள் வெளியேற்றப்பட்டமைக்கான எதிர்
வினை, சூரியக்கதிர்-2 தாக்குதலின் அனுபவப் பதிவு, ஈழம் தமிழ்த்
திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்ட விதம், ஈழப் போராட்டம் பற்றிய சேரனின்
விமர்சனப் பார்வை, ஜூலை 83 கலவரத்தின் இருபத்தைந்தாம் நினைவாண்டு
சிறப்பிதழ், தமிழக முகாம்களில் ஈழத் தமிழர் நிலை என சுமார் இருபதாண்டு கால
ஈழம் பற்றிய பன்முகப்பட்ட பதிவுகளின் தொகுதி இந்நூல்.
ஈழப்பிரச்சினை பற்றிய முழுமையான புரிதலுக்கு அவசியமான வாசிப்பாக அமைகிறது
இத்தொகுதி.