பரத்தைத் தொழிலில் ஒரு படித்த பெண்
₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சசிகலா பாபு
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :143
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789361104473
Add to Cartமானதா தேவி, இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வங்காளத்தின்
பணக்கார உயர்சாதிக் குடும்பத்தைச் சேர்ந்த படித்த பெண். தாயை இழந்து
தந்தையின் அன்பும் கிடைக்காத அவரைப் பதின்பருவத்தில் உறவுக்கார இளைஞன்
ஒருவன் தன் மாயவலையில் வீழ்த்தி, வீட்டிலிருந்து கூட்டிக்கொண்டு போய் பல
இடங்களிலும் சுற்றித் திரிந்த பின்னர், இறுதியில் பிருந்தாவனத்தில்
விட்டுவிடுகிறான். சூழலும் இளம்வயதும் அவரை வழிதவறவைக்கின்றன.
கல்கத்தாவுக்கு வந்து பாலியல் தொழிலில் இறங்குகிறார். சமூகத்தின் உயர்ந்த
மனிதர்கள், வணிகர்கள், தேசபக்தர்கள், சீர்திருத்தவாதிகள், பண்டிதர்கள் என
அனைவரையும் தனது வாடிக்கையாளர்களாகச் சந்திக்கிறார். தன் தொழிலில் வசதியும்
சந்தோஷமும் ஒருவித சுதந்திரமும் பெற்ற பின்பும்கூட, சமுதாயத்தில் தனது
இடம் எது என்ற கேள்வியும் அவருக்குள் ஓடிக்கொண்டேயிருக்கிறது. இந்த நூல்
அவரது சிறுவயது ஆசைகளை, ஏமாற்றங்களை, மனப் போராட்டங்களை, பாலியல் தொழிலில்
சந்திக்க நேர்ந்த மனிதர்களின் குணாதிசியங்களை உணர்ச்சியோடு
வெளிப்படுத்துகிறது. பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் தேச விடுதலைப்
போராட்டத்தில் பங்கேற்றதையும் பேசுகிறது. கிளுகிளுப்பானதாக அறியப்படும் ஓர்
அந்தரங்க உலகத்தின் யதார்த்தப் பக்கத்தை வனப்போடு சித்திரிக்கும் இந்த
நூல், மகத்தான படைப்புகளைப் போல ஒரு நூற்றாண்டைக் கடந்து இன்றும்
நின்றுகொண்டிருக்கிறது.