book

உலகம் போற்றும் ஒபாமா

Ulagam Potrum Obama

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பட்டத்தி மைந்தன்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :98
பதிப்பு :3
Published on :2010
Add to Cart

உலகிலேயே மிகக் கூடுதலான அதிகாரம் பெற்ற அதிபராகத் திகழ்பவர் அமெரிக்க நாட்டு அதிபரேயாவார். அந்த அளவிற்கு அந்த நாட்டு அரசியல் அமைப்புச் சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் செயலாற்றி வரும் வெள்ளை மாளிகையும் சிறப்பான இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது.
அமெரிக்கா பழம்பெரும் பாரம்பரியம் கொண்டதல்ல என்றாலும் அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்குள்ள அதிகாரம் வேறு எந்த நாட்டுத் தலைவருக்கும் இல்லை என்பது உண்மை.
அரசியலைப் பொறுத்தவரையில் இப்போது தீவிரமாகச் செயல்பட்டு வரும் ஒபாமா, 2004-ஆம் ஆண்டு வரை சிகாகோ பல்கலைக்கழகம் சட்டக்கல்லூரியில் பகுதி நேரப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அந்தப் பல்கலைக்கழகத்தின் சட்ட ஆய்வுக் கமிட்டியில் தலைவராகப் பதவியேற்ற முதல் கறுப்பினத்தவரும் ஒபாமாதான்.
ஒபாமா எந்த இடத்திற்குப் பிரச்சாரத்திற்குச் சென்றாலும் "மாற்றம் வேண்டும்” “மாற்றம் வேண்டும்" என்ற தாரக மந்திரத்தைக் கூறிக் கூறி அமெரிக்க அதிபர் தேர்தல் வாலாற்றிலேயே பெரியதோர் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டார் என்று உலக நாடுகள் அனைத்தும் கூறி வியக்கும் அளவுக்குப் பெரும் சாதனை புரிந்துவிட்டார்.