book

ஆன்மீகக் குட்டிக் கதைகள்

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேணு சீனிவாசன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184464320
Add to Cart

இந்திய ஞானிகளும் வேத ரிஷிகளும் கற்பித்த வாழ்க்கை முறையை நாம் மேற்கொள்ள முயல வேண்டும். அதற்கு ஆன்மீகம் ஒன்றே வழி. கடவுளை நம்புவதும், அவரின்றி அணுவும் அசையாது என்பதை உணர்வதும் நமது குறிக் கோள்களை அடையும் எளிய வழி, இந்த வழியைப் பின்பற்றி, நமது முன்னோர் எளிய வாழ்க்கை வசதிகளை மேற்கொண்டு திருப்தியாக வாழ்ந்தனர்.
' ' நாமும் அவர்களைப் பின்பற்றி நமது வாழ்க்கையை ஒளி , மயமாக்குவோம். நமது வேதங்கள்
அசதோமா சத் கமய தமசோமா ஜோதிர் கமய மிருத்யோர்மா அமிர்தம் கமய
என்று முழங்குகின்றன. அதாவது இறைவா என்னை பொய்யான வாழ்க்கையில் இருந்து சத்திய வாழ்வுக்கும் அறியாமை இருட்டில் | இருந்து ஞான வெளிச்சத்திற்கும் மரணத்தில் இருந்து மரணம் இல்லாத நித்ய வாழ்விற்கும் அழைத்துச்செல் என்பதே இதன் பொருள்.