அலை விளையாட்டு
₹185+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரேவா
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789392876707
Add to Cartநிறைய நிறைய அன்பு செய்த பின்னும் நிறையாத இந்தப் பேரன்பு கடலளவு விரிகிற போது, அலை தேடி ஓடி மணற் பாதம் புதைய, ஈரம் வாங்குகிற பேராவல் ஒவ்வொரு முறையும் என்னைக் கடல் தேடச் சொல்கிறது மோனா. பேராவல் உன் பேச்சு.. பெருந்தீ என் கோபம். கட்டுப்பட மறுக்கிற போதெல்லாம் சுட்டெரிக்கிற சூரியன் உன் சமாதானம்.. கொடுத்தனுப்ப முடியாத வாசங்களை தைத்து வைத்திருக்கும் இச்சுவாசம் சூறாவளி.. சுழன்றடிக்கிற போதும் அது இழுத்து வருகிற அத்தனையிலும் ஒட்டிக்கொண்டுவிடும் உன் முகம் ஒரு பௌர்ணமி.அள்ள அள்ள தீராத முத்தங்கள் கடல் முத்துகள்.. ஆழம் போக அனுப்பும் படகு நம் வாழ்விற்கான துடுப்புகள்... கரை சேருதலுக்கு முன் நிறைகிற படகில் விலையாகும் நியாபகம் தீராத நம் உரையாடல்.