வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை (இஸ்மத் சுக்தாய்)
₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சசிகலா பாபு
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :404
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789387333154
Add to Cartஇஸ்மத் சுக்தாய் அவர்களுடைய, வெகுவாய்க் கொண்டாடப்பட்ட
நினைவுக்குறிப்புகளாகிய ‘காகஸி ஹை பைரஹன்’ நூலின் முழுமையான மொழியாக்க
நூலாகிய ‘வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை’, அவருடைய வாழ்வின் மிக
முக்கியத்துவம் வாய்ந்த வருடங்களின் நிகழ்வுகளை உற்சாகத்துடன்
எடுத்துரைக்கிறது. அவற்றோடே, இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில், ஒரு
பெரிய இசுலாமியக் குடும்பத்தில், போராட்டங்களூடே கழிந்த தன் பால்யம்
குறித்த தெளிவான விவரணைகளையும் ஆசிரியர் தருகிறார். தனக்கான கல்வியைப்
பெறுதற்காக அவர் கடந்துவந்த இடர்களையும், ஒரு எழுத்தாளராகத் தனித்துவமான
அடையாளத்தை அடைவதற்காக அவர் சந்தித்த போராட்டங்களையும், வெகு நேர்மையுடன்
சுக்தாய் பதிவு செய்திருக்கிறார். விளைவாக, உருது எழுத்தாளர்களுள்
குறிப்பிடத்தக்கதொரு எழுத்தாளரால் அளிக்கப்பட்ட மிக வலிமையானதொரு
நினைவுக்குறிப்பு நூலை நாம் அடைந்துள்ளோம். ‘இவர் இலக்கியப் புரட்சியை
முன்னெடுத்து வழிநடத்தினார்’ – தி ஹிந்து. “அறிவார்ந்த,
சுய-விழிப்புணர்வுமிக்க, ஆய்வுப்பூர்வமான நூல்” – டைம் அவுட்.