book

தமிழ் நாவலர் சரிதை

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஔவை துரைசாமி பிள்ளை
பதிப்பகம் :ஜெகநாதன் புத்தக நிலையம்
Publisher :Jeganathan Puthaka Nilayam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

தமிழ்க்குடி உலகின் மூத்தக்குடி என்பர். எனவே தமிழனின் தொன்மை இனிது விளங்கும். உலகில் மொழிகளே பல நாடுகளில் தோன்றாத காலத்தே தமிழன் சங்கம் அமைத்து முறைாகத் தமிழ் மொழியை வளர்த்தவன். அதுபோல பல மொழிகளிலும் எழுத்துகள் தோன்றாத நிலையிலே தமிழில் கவிதை இலக்கியத்தை வளர்த்துள்ளான் தமிழன். அவை தொகைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. எந்தத்தொகுப்புக்குள்ளும் அடங்காமல் தனித்தனியே உதிரிகளாகக் காணப்பட்ட பாடல்கள் தொகுக்கப்பட்டு தனிப்பாடல் திரட்டுகளாக வெளிவந்தன. எனினும் வரலாற்றடிப்படையில் சீரான வரலாறு இல்லாததால் இலக்கிய வரலாற்றுக்கு ஓரளவு துணைசெய்யும் வகையில் தமிழ் நாவலர் வரலாறுகளைத் தொகுத்து வழங்கும் நன்முயற்சியாகத் 'தமிழ் நாவலர் சரிதை' என்னும் இந்நுால்.
இந்த நூலைத் தொகுத்தவருடைய பெயர் தெரிந்திலது. எனினும் சங்ககால இறையனார் முருகவேள் முதற்கொண்டு 16 ஆம் நுாற்றாண்டின் அந்தகக்கவி வீரராகவர் வரை காலவரிசைப்படி பலருடைய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன என்பதை அறிகிறோம். கல்வெட்டுகள், வரலாற்றுக் குறிப்புகள், செப்பேடுகள், இலக்கியங்கள் எனப் பல சான்றுகளின் அடிப்படையில் குறிப்புரைகள் இடம்பெற்றுள்ளன.