book

கம்பன் காட்டும் கும்பகருணன்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் அ. அருணகிரி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :சரித்திர நாவல்
பக்கங்கள் :232
பதிப்பு :7
Published on :2011
Add to Cart

கம்பராமாயணத்திலே வரும் கும்பகருணன் ஒரு அதிசயப் பாத்திரமாவான். அரக்கருக்கே உரிய இனச் செருக்கு ஏற்படும்போது, அவன் இராவணனோடு சேர்ந்து விடுகிறான். இராமன் கட்சிக்கு வந்து விடுமாறு தன் தம்பி வீடணன் தன்னை அழைக்கும்போது, "கும்பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றையும் ஆடல் கொண்டேன் " என இறுமாப்புடன் கூறுகின்றான். இலங்கை அரசின் அமைச்சனுக்குரிய கடமையை ஆற்றும்போது, "பேசுவது மானம்; இடை பேணுவது காமம்; கூசுவது மானிடரை நன்று நம கொற்றம்'' என்று கூறி, அரசன் இராவணனைக் குறை கூறுகிறான். தம்பி வீடணன் இராமனிடம் சரணடைந்ததையும் ஆதரிக்கிறான். அதே நேரத்தில் தான் சரணடைய மறுத்துப் போரி புரிந்து சாகின்றான். கும்பகருணனிடம் இத்துணை நற்குணங்களிருப் பினும், தூங்குவதிலே அவனுக்கு இணையானபாத்திரத்தை உலக மகா காப்பியங்களிலே ஒன்றில் கூடக் காணமுடியாது. கம்பர் காட்டும் கும்பகருணன் தூங்குவதையே ஒரு தொழிலாகக் கொண்ட சோம்பேறியாக அல்லாமல், அதனை ஒரு கலையாக்கி விடுகிறான். அதனால்தான் விழித்தெழுந்தவுடனே களஞ் சென்று போர்புரிய அவனால் முடிகிறது. புதுவை திரு. அ. அருணகிரி அவர்கள் கம்பனுடைய இலக்கியத்திலே தோய்ந்தவர். அதனை ஆய்ந்தவர். ஆண்டுதோறும் புதுவையிலே கம்பராட்சியை நடத்திவரும் இவருக்குக் கும்பகருணனிடம் ஒரு தனிப்பற்று உண்டு போல் தெரிகிறது. கம்பனிலே கும்பகருணன் நேரடியாக அரங்குக்கு வருவது யுத்த காண்டத்தில்தான். ஆனால் இந்நூலிலே பாலகாண்டத்திலிருந்தே காண்டம், காண்டமாக கும்பகருணனைத் தேடுகிறார் அருணகிரியார். ஆரண்யகாண்டத்திலே சூர்ப்பணகை மூலம் அந்தப் பெருந்தூக்கப் பேர் வழியைக் கண்டு உறவாடும்போது, புதையலைக் கண்டவனைப் போல, மகிழ்ச்சியடைகிறார். கும்பகருணனை கம்பராமாயணம் அல்லாத இலக்கியங்களிலேயும் அருணகிரியார் தேடுகிறார். ஆண்டாள் படைத்த திருப்பாவையிலே கும்பகருணன் தூங்குமூஞ்சியாக வருவதைப் பார்த்தபோது, வெற்றி முரசு கொட்டுகிறார். "கம்பன் காட்டும் கும்பகருணன்'' என்னும் இந்நூலிலே கும்பகருணனுக்காக கம்பராமாயண மூலத்திலும் ஒரு யாத்திரையையே நடத்தி விடுகிறார் அருணகிரியார்.