பொன்னியின் நண்பன்
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் பூவண்ணன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :160
பதிப்பு :1
Add to Cartபொன்னியின் நண்பன் என்னும் எனது இந்தச் சிறுவர் நாவலுக்கு முன்னுரை எழுத முற்படும் போது, என் மனத்தில் ஏற்படும் உணர்ச்சிகள் முழுவதையும் எழுதச் சொற்கள் இல்லை! சினிமாவில் ஒரு சந்திப்பைப் பலமுறை பார்த்திருக்கலாம். ஒரு குழந்தை நான்கைந்து வயதில் காணாமல் போகும். பெற்றோர் அதைத் தேடி அலையாய் அலைவார்கள். ஆண்டு பலவாகத் தேடுவார்கள். குழந்தை கிடைக்காது. அதே குழந்தை திருமண வயதில், இதோ உங்கள் காணாமல் போன மகன் அல்லது மகள் என்று அறிமுகப்படுத்தப்பட, பெற்றோர் ஆனந்தக் கண்ணீரோடு அணைத்து மகிழ்வார்கள்!