வணிகத் தலைமைகொள்
₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராம் வசந்த்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :95
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789394265141
Add to Cartசொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கும்
விருப்பம். ஏனென்றால் சுயதொழில் செய்தால் சுயமரியாதையோடு வாழலாம் என்பதால்
அந்த ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால், முதலீடு செய்ய பணம் இல்லாமை
உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதை நிறைவேற்ற முடியாமல் வேறு வேலைகளுக்குச்
சென்றுவிடுகின்றனர். சொந்தத் தொழில் செய்து நஷ்டம் அடைந்து விட்டால் என்ன
செய்வது, எல்லாத் துறையும் வேகமாக மாறிவரும் காலகட்டத்தில் நாம் தொடங்கும்
தொழிலைத் தொடந்து நடத்த முடியுமா, தொழிலில் தோல்வியடைந்தால் குடும்பத்தின்
நிலை என்னாவது போன்ற அச்சங்கள்தான் தொழில் தொடங்க நினைக்கும் அனைவரின் முன்
நிற்கின்றன. இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில்களையும் ஊக்கமளிக்கும்
ஆலோசனைகளையும் சொல்லி, ஆனந்த விகடனில் வெளியான ‘வணிகத் தலைமைகொள்’ தொடர்
கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுதல்,
நுகர்வோரை எப்படி அணுக வேண்டும், அவர்களை எப்படித் தக்கவைத்துக்கொள்வது,
தொழிலை விரிவுபடுத்த என்னென்ன செய்ய வேண்டும் போன்ற, சொந்தத் தொழிலில்
வெற்றிகரமாகச் செயல்பட அனைத்து ஆலோசனைகளையும் மிக எளிமையாகச் சொல்லித்
தரும் நூல் இது. சுயதொழில் வெற்றிக்கான சூத்திரங்களை அறிந்து கொள்ள
வாருங்கள்!