book

வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்

₹105+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன். செந்தில்குமார்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788184766592
Add to Cart

விதைத்துவிட்டு நல்ல விளைச்சல் கிடைக்கும் எனக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு பல நேரங்களில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஏனெனில், விவசாயமும் காலத்துக்கேற்ப மாறி வருகிறது. அத்தகைய மாற்றங்களுக்கு ஏற்றவாறு பயிரிட விவசாயிகளுக்குப் பயன்தரும் பல ஆலோசனைகளைத் தருகிறது இந்த நூல். விவசாயம் தொடங்கி, கால்நடைகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல், மரம் வளர்ப்பு, பண்ணைகளைப் பராமரித்தல் என அனைத்து வகையினருக்கும் விரிவான விளக்கங்களை அள்ளித் தரும் நூல் இது. எல்லாவித சந்தேகங்களுக்கும் அந்தந்தத் துறையில் சிறந்துவிளங்கும் வல்லுநர்கள் விளக்கமளித்திருப்பதே இந்த நூலின் சிறப்பம்சம். பசுமை விகடனில் ‘நீங்கள் கேட்டவை’ பகுதியில் வெளிவந்த வாசகர்களின் கேள்விகளும் அதற்கான விளக்கங்களும், ஏற்கெனவே மூன்று தொகுதிகளாக வெளிவந்து மகத்தான வரவேற்பைப் பெற்றன. நான்காம் தொகுதியாக வெளிவந்திருக்கும் இந்த நூலில், ‘மண் புழு கரைசலால் மகத்தான மகசூல் கிடைக்குமா? காளான் வளர்ப்பால் கைநிறைய பணம் கிடைக்குமா? எந்தெந்த மரங்களை அரசாங்கத்தின் அனுமதியோடு வெட்டி விற்பனை செய்யமுடியும்? நண்டு வளர்க்க பயிற்சி உண்டா?’ என்பன போன்ற கேள்விகளுக்கு அரிய, உரிய தகவல்களை அளிப்பதோடு நின்றுவிடாமல், அதற்குரிய வல்லுநர்களின் முகவரி, தொலைபேசி எண் ஆகியவை களைக் கொண்ட அரியதொரு பெட்டகமாய்த் திகழ்கிறது இந்நூல். இதை பசுமை விகடன் இதழின் பொறுப்பாசிரியர் பொன். செந்தில்குமார் தொகுத்துள்ளார். விவசாயம், விவசாயம் சார்ந்த துறையினருக்கு உற்ற நண்பனாக, ஆசானாக, இந்த நூல் வழிகாட்டும் என்பது மிகையல்ல