வீரமங்கை இளவரசி சம்பா
₹500
எழுத்தாளர் :லிங்கராசா
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :சரித்திர நாவல்
பக்கங்கள் :517
பதிப்பு :1
Published on :2021
Add to Cartடெல்லியின் சாவ்ரி பஜார் பகுதியில் உள்ள குறுகிய சந்தில் இந்த மசூதி அமைந்துள்ளது. மசூதியின் உண்மையான பெயர் ‘முபாரக் பேகம் கி மஸ்ஜித்‘ என இருந்தாலும், காலப்போக்கில் ‘ரண்டி கி மஸ்ஜித்’ என்றே அழைக்கப்படுகிறது.
ரண்டி என்ற சொல் பாலியல்
தொழிலாளிகளை தரக்குறைவாக அழைக்க, இந்தியில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்.
ஒரு பாலியல் தொழிலாளியின் பெயரில் மசூதி கட்டப்பட்டுள்ளதா எனப் பலரும்
வியப்படையலாம். இது சற்று விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் நடந்த
விஷயம்.
1823-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த
மசூதியை, முபாரக் பேகம் என்ற பெண் கட்டினாரா அல்லது அவரின் நினைவாகக்
கட்டப்பட்டதா என்பது தெரியவில்லை. ”முபாரக் பேகம்தான் இந்த மசூதியைக்
கட்டினார். அவர் ஒரு நல்ல பெண்மணி” என்கிறார் இந்த மசூதியின் மௌலவி.இந்த மசூதியைக் கட்டியவர் யார்
என்பதில் குழப்பம் இருந்தாலும், இந்த மசூதி ஒரு பாலியல் தொழிலாளியால்
அல்லது அவரது நினைவாகக் கட்டப்பட்டது என்பதே உண்மை.ஒரு பெண்ணின் பெயரில் மசூதி
கட்டப்பட்டுள்ளது என்றால், அந்த காலத்தில் எவ்வளவு அதிகாரம் மிக்கவராக அவர்
இருந்திருப்பார் என்பதை அறியமுடிகிறது. அந்த அதிகாரம் படைத்த பெண்ணின்
பெயர் முபாரக் பேகம். டெல்லியில் வாழ்ந்த அப்பெண் மகாராஷ்டிராவைச்
சேர்ந்தவர். ஓர் இந்துவாகப் பிறந்து வளர்ந்தவர்.
இந்த கருவைக்
கதைக்களமாக்கி ‘ வீரமங்கை இளவரசி சம்பா’ என்ற பெயர் நிலைத்த, ஒரு
வீரமங்கையின் வரலாற்றை எப்பொழுதும் போல் அற்புதமாக சரித்திர நாவலாகத்
தந்துள்ளேன்.