book

மழைக்காலமும் குயிலோசையும்

Mazhaikaalamum Kuyilosaiyum (Essays)

₹290+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா. கிருஷ்ணன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :208
பதிப்பு :4
Published on :2010
ISBN :9789355233080
Out of Stock
Add to Alert List

இந்தப் பின்னணியில் கிருஷ்ணனின் கட்டுரைகளை நாம் அணுக வேண்டும். 1940 களிலும், 50களிலும் எளிய தமிழில் கானுயிர் பற்றியும், இயற்கை பற்றியும் கட்டுரைகள் எழுதி, சூழலியல் சார்ந்த கருதுகோள்களை அவர் விளக்க முற்பட்டார். அவர் எழுதிய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு நம் நாட்டிலோ அல்லது உலகளவிலோகூடத் தோன்றியிருக்கவில்லை. வேட்டை இலக்கியங்களைப் படித்து மகிழ்ந்துகொண்டிருந்த காலமது. அவருடைய கட்டுரைகளின் சிறப்பை அறிவுலகம் அடையாளம் கண்டுகொள்ளாததற்கு இதுவும் ஒரு காரணம். மழைக்காடுகளைப் பாதுகாப்பது பற்றியும், புலி அழிவின் விளிம்பிலிருப்பது பற்றியும், இந்தியாவில் பல உயிரினங்கள் அற்றுப் போகும் ஆபத்து பற்றியும் ஒரு தீர்க்கதரிசி போல் எழுதினார்.