பாரதியார் பற்றி ம.பொ.சி. பேருரை
₹399+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ம.பொ. சிவஞானம்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :504
பதிப்பு :7
Published on :2012
Add to Cartதமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் வளப்படுத்துவதற்காக அவ்வப்போது சான்றோர்கள் தோன்றி செயற்கரிய சாதனைகளைச் செய்து வந்திருக்கிறார்கள் என்பது தமிழகத்தின் வரலாறு. செயற்கரிய செய்த சான்றோர்களை மறந்தும் மறைத்தும் விடாமல் காப்பதற்கென இந்த இருபதாம் நூற்றாண்டில், காலம் தந்த சான்றோராக சிலம்புச் செல்வர் ஐயா ம.பொ.சி. அவர்கள் தோன்றியுள்ளார்கள்.
மக்களால் மறக்கப்பட்டும் புலவர் பெட்டகங்களிலே பூட்டப்பட்டும் இருந்த சிலப்பதிகாரம் போன்ற செந்தமிழ் இலக்கியங்கள் இன்று நாடெங்கும் போற்றப்படுவது சிலம்புச் செல்வர் ஐயா அவர்களின் தீவிரமான செயல்களால்தான். விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட வீரபாண்டியக் கட்ட பொம்மன், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., இன்னும் பல தேச பக்தர்களின் புகழ் மக்களிடையே நிலைத்திருப்பதற்குக் காரணமானவர்கள் ஐயா அவர்கள்.'