book

கலைஞரின் காதலர் திருவாரூர் கு. தென்னன்

Valangkalai Valangkum Vachiya Kargal

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருவாரூர் துரைச்செல்வம்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2011
ISBN :9789381828526
Add to Cart

நட்பு என்ற சொல்லுக்கான உண்மையான அர்த்தத்தை இலக்கியங்களில்-புராணங்களில் - இதிகாசங்களில்தான் பார்த்திருக்கிறோம். கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தை நட்பு பற்றி சங்க இலக்கியம் சிறப்பித்துக் கூறுகிறது. கண்ணன்-குசேலன் நட்பைப் புராணம் எடுத்துக் காட்டுகிறது. கர்ணன்-துரியோதணன் நட்பை இதிகாசம் அழகாகச் சொல்கிறது. ஆனால், நேரில் இப்படியொரு நட்பு இருக்க முடியுமா? அதுவும் நாம் வாழும் காலத்தில் இருக்க முடியுமா என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்படுவது இயற்கைதான். முடியும்... என்பதை நம் கண்முன்னே காட்டியது கலைஞர்-தென்னன் நட்பு.
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்-தமிழகத்தின் ஐந்து முறை முதல்வர்- முத்தமிழறிஞர் எனப் பல சிறப்புகளோடு விளங்கும் கலைஞரின் உற்ற நண்பர் திருவாரூர் கு.தென்னன். பள்ளிப் பருவத்திலிருந்து இருவருமே ஒரே இலட்சியப் பாதையில் பயணித்தவர்கள். அந்தப் பயணம் என்பது தென்னன் அவர்கள் மறையும்வரை தொடர்ந்தது. அதனைத் தமிழகம் பார்த்தது. வெளிப்படையாகத் தெரிந்தது குறைவுதான். வெளியுலகத்திற்குத் தெரியாத நிகழ்வுகள் ஏராளம். கலைஞரின் முதல் குழந்தை எனப்படும் முரசொலிக்கு செவிலித்தாய் தென்னன்தான் என்பதிலிருந்து, கலைஞரின் அரசியல் வரலாறு நெடுகிலும் ஒரு சலனமில்லாத ஓடையாக தென்னன் எப்படிப் பயணித்தார் என்பதும், தன் நண்பனை இதயத்தில் மட்டுமின்றி, உயர்ந்த இருக்கைகளிலும் வைத்து அழகுப் பார்க்க வேண்டும் என்றும் கலைஞர் ஆசைப்பட்டு நிறைவேற்றியது வரையிலும் பல செய்திகள் இந்த நூலுக்குள் புதைந்திருக்கின்றன.
இந்தத் தலைமுறைக்குத் தெரியாத- முந்தைய தலைமுறை மறந்த இத்தகையச் செய்திகளை மிகச் சிறப்பாகத் தொகுத்து எழுதி, திருவாரூர் கு.தென்னன்-கலைஞரின் காதலர் என்ற தலைப்பில் அருமையான நூலாகத் தந்திருக்கிறார் ஆசிரியர் துரைச்செல்வம். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய அவர், திராவிட இயக்கத்தின் இலட்சியப் பாதையில் கலைஞரின் வழிகாட்டுதலில் தொடர்ந்து பணியாற்று பவர். தென்னனுக்கு நிழலாக இருந்தவர். நட்பின் வரலாற்றை ஒரு காலப்பெட்டகமாக அவர் படைத்திருக்கிறார்.