book

தியாகத் திருவுருவம் தோழர் ஆர்.என்.கே 100

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பசுமைக்குமார்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381828397
Add to Cart

தோழர், தலைவர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலாக 1996-ம் ஆண்டு எழுதினேன். அவரது வரலாறு பல திருப்பங்களைக் கொண்டது. பரபரப்பான பல சம்பவங்களையும் உள்ளடக்கியது. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக அவரை நான் அறிவேன். ஒரு தந்தைக்குரிய பாசத்தோடு பழகிவரும் பண்பாளர். மக்களுக்கான பணியாற்றுவதில் எப்போதுமே முன்னணியில் இருப்பவர். அவருடைய வாழ்க்கைப் போராட்டத்தில் எண்ணற்ற போராட்டங்களைச் சந்தித்தவர். சிறை தண்டனைகளையும் அனுபவித்தவர். தமிழக மக்களுக்குக் கிடைத்த நம்புவதற்குரிய நல்வீரர், தலைவர்.
அமெரிக்காவில் 11 மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னால் விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய இடத்தையும், உலகின் முதல் தொழிலாளி வர்க்க கோரிக்கையான எட்டு மணி நேர வேலை என்ற அடிப்படை கோரிக்கையை முன்வைத்த மே தினத்தின் விளை நிலமும், போராட்டக்களமுமான ஹேமார்க்கெட் பகுதியையும் பார்வையிட்டார்.
நான் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அமெரிக்கப் பயணம் குறித்தே தனி நூல் எழுதவேண்டும் என்று தோன்றியது. 'தியாகத் திருவுருவம் தோழர் ஆர்.என்.கே.' என்ற தலைப்பில் நான் இப்பொழுது எழுதியுள்ள இந்த நூலில் அரிய, புதிய, இனிய தகவல்கள் பலவற்றை வாசகர்கள் தெரிந்துகொள்ள முடியும். இந்த நூல் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என்று நம்புகிறேன்.