book

முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும்

Muthollayiram Moolamum Uraiyum

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கதிர் முருகு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :1
பதிப்பு :7
Published on :2017
Add to Cart

தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கிழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை இறையனார் களவியல் ஆகிய செவ்வியல் படைப்புகளுள் ஒருங்கே வைத்து எண்ணப்படும் பெருமை உடைய நூல் முத்தொள்ளாயிரம். சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூவேந்தர்களின் பெருமைகளை எடுத்துக் கூறும் இந்நூலில் இடம் பெறும் பாடல்கள் புறத்திரட்டில் இருந்து முதன் முதலாகத் தொகுக்கப் பெற்றன. அப்பாடல்களின் எண்ணிக்கை நூற்று எட்டாகும். மேலும் பழைய உரைகளில் கிடைக்கப்பெற்ற இருப்பது இரண்டு பாடல்களும் முத்தொள்ளாயிரப் பாக்களாக எடுத்து கொள்ளப்பட்டன. இவ்விலக்கியத்தை இயற்றிய புலவர் இன்னார் என அறிய இயவில்லை. இருப்பினும் இந்நூலில் இடம்பெறும் 'மன்னிய நாண்மீன்', 'மடங்கா மயிலூர்தி' என்னும் இரு பாக்களும் நூலைப் படைத்த புலவர் சைவ சமயத்தினர் என்பதைத் தெளிவாக்குகின்றன. இப்பாக்கள் முறையே சிவனையும் முருகப் பெருமானையும் போற்றுவனமாக அமைந்திருக்கின்றன.