book

திறனாய்வாளராக உரையாசிரியர்கள்

₹260+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. மருதநாயகம்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :254
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

திறனாய்வாளனின் பணி நூலின் நிறைகுறைகளைச் சொல்வதேயென்றும் சமுதாய  இயல் அணுகுமுறைகள் போன்ற புறவய அணுகுமுறைகளே சிறப்பானவையென்றும் எண்ணுவார் பழம் உரையாசிரியர்களைத் திறனாய்வாளர்களென்று ஏற்றுக் கொள்வதில்லை. இது இன்றைய மேலைத்திறனாய்வைப் பற்றிய அறியாமையால் விளைந்த குற்றமாகும். எடுத்துக்கொண்ட  நூலின் செம்மையைச் சிறப்புற  விளக்குவதே திறனாய்வாளனின் தலையாய கடமையென்றும்' குறைகளையே சுட்டும் எதிர்மறைத்திறனாய்வு பயன்ற்றதென்றும் டி. எஸ். எலியட் நார்த்ராய் ஃபிரை போன்ற பேரறிஞர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மார்க்சியம் போன்ற சமுதாயவியல் அணுகுமுறைகளைக் கையாளும் மேலைத்திறனாய்வாளர்கள் அவற்றின்  குறைகளை உணர்ந்து அகவய அணுகுமுறைகள் ஒன்றிரண்டையும் தமது ஆய்வில் இணைத்துக்கொள்கிறார்கள். மேலை ஐரோப்பிய இலக்கியங்கள் பலவற்றிலும் தமது ஒப்பாய்வினை நிகழ்த்திவரும் ஹாரல்டு புளூம் சமுதாயவியல் அணுகுமுறைகளால் படைப்பிலக்கியத்திற்கும் திறனாய்வுத் துறைக்கும் பெருங்கேடு ஏற்பட்டுள்ளதென்று வருந்துவார்.