book

மணிவாசகப் பெருமான் வரலாறு

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா. சுப்பிரமணிய பிள்ளை
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2008
Add to Cart

இவர் மூன்றாவது நூற்றண்டின் பிற்பகுதியிலேயே நிலவுலகிற்றிகழ்ந்தன ரென்பது உயர்திரு மறைமலையடிகளால் விக விரிவான ஆராய்ச்சி செய்து முடிவுகட்டப் பட்டது. அஃது அந்நூற்றாண்டிலேயே தென்னிந்தியாவின் மேலைக்கரையிற் குடியேறி வந்திருந்த பாதிரிமார்களால் ஏட்டுச்சுவடியில் அப்பெருந்தகையார் சார்பாக எழுதி வைத்த குறிப்புக்களால் ஐயத்திற்கிடமல்லாதபடி வலியுறுதல் காண்க.
திருவனந்தபுரத்திலுள்ள கேரளசங்கத் தின் தொன்னூ அமைச்சராய் விளங்குந் திருவாளர், T.K. ஜோசப் அவர்கள் மாணிக்கவாசகரைப் பற்றிய மலையாளக் கிறித்துவச் செப்புப்பட்டயங்களைத் தமது நூலொன்றிற் றொகுத்து வெளியிட்டிருக்கின்றார் அவைகள் மலையாள எழுத்தில் இருப்பதால், மாணிக்க வாசகப் பெருமான் சார்பான செப்புப்பட்டயத்திலுள்ள சொற்றொடர்களைத் தமிழெழுத்தில் எழுதித் தெரியாத சொற்களுக்குப் பொருள் விளக்கமுஞ் சேர்த்து இந் நூலெழுதுங் காலத்திலே மிக்க அன்புடன் அனுப்பிய அவர்களது பெருநன்றிக்கு நாம் என்றுங் கடமைப்பட்டுள்ளோம். அச்செப்புப்பட்டயப் பகுதி இந்நூலின் இறுதியிற் சேர்க்கப்பட்டுள்ளது.
அப்பட்டயத்தினால் நாம் அறிந்து கொள்வது யாதெனில், காவிரிப்பூம்பட்டினம் முதலிய துறை முகங்களிற்றமிழரிற் சிலர் கிறித்து மதக் குருமார் சொற்கேட்டு அச்சமயநெறி நின்றனர். கி.பி. 293வது ஆண்டிற்கு முன்னேயே அவ்விடத்தில் சைவக்கிளர்ச்சி ஏற்பட்டது. மணிவாசகப் பெருமானுடைய அடியார்கள் மேலைக்கரை முதல் கீழைக்கரை வரையிலுள்ள பல இடங்களிலுந் திருவருளினாற் பலவகை அருஞ்செயல்களை இயற்றிச் சைவத்தை வளர்த்தனர்.