book

பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திரு.வி. கலியாணசுந்தரனார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :304
பதிப்பு :5
Published on :2011
ISBN :97893391167547
Add to Cart

இந்நூல் உள்ளக்கிடக்கையை உணர விரும்புவோர் நூலஐ முற்றும் படித்துப் பார்ப்பாராக.  ஆங்காங்கே சில பொருள் கண்டு, நூலைப் பற்றி ஒருவித முடிந்த கருத்துக் கோடலாகாது.  ஓரிடத்தில் ஓர் ஐயப் பொருள் காட்சியளிக்கும்.  அவ்வைய நீங்கப் பொருள் மற்றோரிடத்தில் மிளிரும்.  ஆகவே, நூலை முற்றும் வாசிக்கும்மாறு அன்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

இயற்கை வாழ்வு, செயற்கைத் தாழ்வு, உடலோம்பல், மலச்சிக்கல், கூட ஒழுக்கத்தால் விளையுங் கேடுகள் போன்ற பொருள்கள் நூலின் ஊடே சில இடங்களில் பெய்யப்பட்டிருக்கிறன்றன.  அவை 'கூறியது ்கூறல்' நோக்குடன் பெய்யப்பட்டவனல்ல.