நன்றி யாருக்கு
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :K.A. மதியழகன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2005
Add to Cartஅம்மாவின் கேள்விக்கு கண்ணன் பதில் சொல்லும் முன்பே சிவராமன், ""நானே சொல்கிறேன் கோமதி. பஸ்ஸில் கண்டக்டர் கேட்டால் பதினொன்று வயசுதான் ஆகிறது என்று கண்ணனிடம் சொல்லச் சொன்னேன். ஆனால், கண்ணன் அதை மறந்துவிட்டு தனக்குப் பன்னிரெண்டு வயது என்று உண்மையைச் சொல்லி விட்டான். பன்னிரெண்டு வயது ஆனால் முழு டிக்கெட் வாங்க வேண்டும். அரை டிக்கெட் வாங்கி சிறிது பணத்தை மிச்சப்படுத்தலாமே என்று நானே கண்ணனிடம் பொய் சொல்லச் சொன்னேன். ஆனால், அவன் உண்மையாக நடந்து கொண்டு என்னைத் திருத்தி விட்டான். அதற்காகத்தான் அவனுக்கு நான் நன்றி சொன்னேன்!'' என்று சொன்னார்.