book

ஈரானியப் புரட்சி

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :281
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789392474170
Add to Cart

சரித்திரம் என்பது எப்போதும் திரி பொசுங்கி வெடிக்க காத்திருக்கும் வெடி தான்...! சர்வதேசமும் புருவம் உயர்த்தி வியப்பை வெளிப்படுத்திய பெரும் புரட்சி, இஸ்லாமின் மீட்சிக்கு வழி கோலிய ஈரானியப் புரட்சியாகும். இப்புவியினை அலங்காரக் குடை பிடித்த ஈரான் எனும் நெடிய தொரு பாரசீக கலாச்சாரம், சிம்ம உறக்கமாய் விழுது பரப்பி நிற்பதை இந்நூலை வாசிக்கும் கூர்மையில் ஒவ்வொருவரும் உணர்வீர்கள்.! பூட்டி வைக்கப்பட்ட நேற்றைய வாழ்க்கையை திரும்பத்திறந்து பார்ப்பது என்பது ஒரு படபடப்பான பரவசம்...! எழுத்தின் பயனறிந்த சமூகம் ஈரானியப் புரட்சி வரலாற்றுக்குள் ஆதி யந்தமாய் நுழையும் போது அதையே உணர்வீர்கள்..! ஈரானியப் புரட்சி மேற்குலகு சார்பு மன்னர் ஆட்சியை நீக்கிவிட்டு, மேற்குலகு எதிர்ப்பு கொண்ட இஸ்லாமிய ஆதிக்க கொள்கையை உடையதாக ஈரானை மாற்றியது. கிழக்கும் வேண்டாம் மேற்கும் வேண்டாம் இஸ்லாமிய குடியரசே வேண்டும் என்ற சூளுரை ஈரானியப்புரட்சியில் எதிரொலித்தது. பாரசீக மக்கள் உலகின் முதல் வரலாற்று மக்கள் என்கிறது வரலாறு. 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரசீக முடியாட்சியை வேரோடு பறித்து, ஈரானில் குடியாட்சி மலரச்செய்தது வரலாறு...! புவியை அதிரச் செய்த இப்புரட்சியின் கோரநாக்குகளை இப்புத்தகம் கண் முன்கொண்டு வந்து நிறுத்துகிறது....!