book

பாரி காதை

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. இராகவையங்கார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :387
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

காலத்தால் முந்தைய கன்னித்தமிழ் காப்பிய வளத்தால் சிறந்து விளங்குவது. சங்க இலக்கியம் தொடங்கி சிலப்பதிகாரம் முதலாய் ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்,பிற்பட்ட காப்பியங்கள் எனப் பல்கிப் பெருகி இளமை குன்றாமல்  திகழ்ந்து கொண்டிருக்கிறது. பண்டைய காப்பியங்களுக்குப்பின் காப்பியங்களின் செல்வாக்குக் குறைந்து சிற்றிலக்கியங்கள் பெருகலாயிற்று. எனினும் அவ்வப்போது காப்பியங்கள் தோன்றியவண்ணமே இருந்துள்ளன.

அவ்வாறு பிற்காலத்தில் தோன்றிய செந்தமிழால் இயன்ற சீரோங்குக் காப்பியங்களுள் ஒன்றாகவும், உயர்ந்ததாகவும் விளங்குவது பாரி காதை.பறம்பு மலையை ஆண்ட பாரி வள்ளலுடைய வரலாற்றுச் சான்றுகளை ஆதாரங்களுடன் திரட்டி அவற்றை முறைப்படித்தி வரலாற்றுச் சான்றுகளை ஆதாரங்களுடன் திரட்டி அவற்றை முறைப்படுத்தி  வரலாற்றுக் காப்பியமாகப் படைத்துத் தந்துள்ளார். முதுபெரும் தமிழறிஞர் இரா. இராகவையங்கார் அவர்கள். செந்தமிழ் தொடர்களும் சொற்களும் சீர்பெற்றியங்கும்  பெருங்காப்பிய நிலையது எனும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.