book

பாண்டி மண்டல சதகம்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் முத்து. இராம்மூர்த்தி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :81
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

வளத்திலும் நலத்திலும் சிறந்து விளங்கும் தமிழ்மொழியில் இடைக்காலத்தில் சிற்றிலக்கியங்களின் ஆட்சி மேலோங்கி நின்றது. அக்காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியங்களைத் தொண்ணூற்றாறு வகையாகப் பகுத்தனர். அவற்றுள் ஒன்று சதகம். சதகம் என்பது 100 பாடல்களைக் கொண்டது. தமிழில் பல சதகங்கள் தோன்றினும் பிற்பகுதியில் தோன்றிய சதகங்களுள் பாண்டி மண்டல சதகமும் ஒன்று. கட்டளைக் கலித்துறை பாடல்களால் அமைந்த நூல். காப்பு, அவையடக்கம் உள்ளிட்டு 105 பாடல்களைக் கொண்டுள்ளது.