book

ஸ்ரீ அன்னையின் அன்பர்கள்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜனகன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

முதல் பாகத்தின் முதல் பகுதி ஸ்ரீ அரவிந்தரின் பிள்ளைப்பிராயம் பற்றிய தகவல்களை நமக்குத் தருகிறது. ஸ்ரீ அரவிந்தரின் பிறப்பு, வளர்ப்பு, மேல்நாட்டுக் கல்வி, ஆகியவைகளோடு அவர் இந்தியாவிற்குத் திரும்பிய பின் ஏற்பட்ட ஆன்மீக அனுபவங்களையும் விவரிக்கிறது. மேலை நாட்டு வளர்ப்பு, கல்வி முறை இவைகளால் சிறிதும் பாதிக்கப்படாமல் தாய்நாடு திரும்பியவுடன், இந்தியாவுக்கே உரித்தான ஆன்மீக அனுபவங்களைப் பெற்று, இந்தியச் சுதந்திரத்திற்குப் பாடுபட உறுதி பூண்ட இவர் பிறப்பிலேயே ஓர் அவத¡ரப் புருஷர் என்பதில் ஐயமில்லை. அவருக்கு பரோடாவிலும், அலிப்பூர் ஜெயிலிலும் ஏற்பட்ட ஆன்மீக அனுபவங்களைப்பற்றிய விஷயங்கள் படிப்பவருக்கு ஆன்ம அனுபவம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. மற்றும், அன்னையைப்பற்றிய தகவல்கள், ஆசிரமம் ஏற்படுத்தி அதில் செயல்பட்ட விதம், சாதகர்களோடு தொடர்பு போன்ற செய்திகள் இதில் தரப்பட்டுள்ளதால் அன்பர்கள் அன்னையைப்பற்றியும், ஆசிரமத்தைப்பற்றியும் விரிவாகத் தெரிந்துகொள்ள உதவியாக உள்ளது.

அடுத்ததாக, அன்னையின் அருட்சக்தி எத்தகையது என்று உணர்த்தும் செய்திகள், ஜடப்பொருட்களும் அன்னையிடம் முறையிட்டு நிவாரணம் பெற்ற நிகழ்ச்சிகள், விநாயகர் அன்னையைச் சந்தித்துத் தனக்கு தேவையான ஆசிரமத்திற்குச் சொந்தமான இடத்தைப் பெற்றது போன்ற செய்திகள் அன்பர்கள் படித்து அறியும் வகைய¢ல் தரப்பட்டுள்ளன. இதில் கொடுக்கப்பட்டுள்ள பூக்களைப்பற்றிய செய்திகளும் அவைகளை அன்னை வழிபாட்டில் உபயோகப்படுத்துவதற்கான விளக்கங்களும் அன்பர்களுக்கு மிகவும் பயன்படக்கூடியதாகும்.