book

அப்பாவுடன் ஒரு நாள்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வடுவூர் சிவ. முரளி
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
Publisher :M.J. Publication House
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2020
Add to Cart

வாழ்வின் ஒரு துளியை விரித்துக் கூறும் இலக்கிய வடிவம் சிறுகதை . கடலிலிருந்து ஒரு துளியைத் தொட்டெடுத்துச் சுவைத்தாலும் அந்தக் கடலின் உப்புச் சுவையை அறிய முடியும்தான். அதுபோலத்தான் சிறுகதை இலக்கியமும். ஒரு சிறுகதை மனிதரின் மொத்த வாழ்வின்  ஒரு துளியை நமக்குக் காட்டும்.  அதிலிருந்து நாம் மனிதரின் மொத்த வாழ்வையும் புரிந்துகொள்ளலாம். இலக்கியம் என்பது காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பார்கள். இலக்கியம் என்பது காலத்தையும் கடந்து காட்டும் கண்ணாடிதான்.

இந்தச் சிறுகதைத் தொகுப்பில் 20 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வாழ்வின் மையப் புள்ளியைத் துளியளவு தொட்டு  மீட்டியுள்ளது. அது வெளிப்படுத்தும் வாழ்வின் இசையிலிருந்து நீங்கள் இன்ப, துன்ப அனுபவங்களை அடையப் பெறலாம்.

இந்த 'அப்பாவுடன் ஒரு நாள்' எழுதப்பட்ட காலத்தைக் கொண்டு, 25 ஆண்டுகளில் ஓர் எழுத்தாளரின் எழுத்து நடையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மாற்றத்தை அறிய இதைவிடச் சிறந்த புத்தகம் கிடைக்காது. பல இதழ்களில் வெளிவந்து சில பரிசுகளைப் பெற்ற சிறுகதைகளின் அணிவகுப்புதான் இந்தத் தொகுப்பு.