book

தமிழில் சிறார் இலக்கியம்

₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ஷிஃபா
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2024
Add to Cart

தாயின் ஆராரோ பாடலில்தான் குழந்தை இலக்கியம் அறிமுகமாகின்றது. இதுவே சிறுவர் இலக்கியத்தின் முன்னோடியாக இருக்க வேண்டும். எந்தக் காலத்தில் இது துவங்கியது என்ற வரலாறு நம்மிடம் இல்லை. ஆராரோ தாலாட்டு மனிதன் நாகரீகமாக வாழத் துவங்குவதற்கு முன்னர் இருந்தே இருந்திருக்க வேண்டும். விடுகதைகள் சிறுவர்களுக்கான விளையாட்டு என்பதில் ஐயமே இல்லை. ஒளவையாரின் ஆத்திச்சூடி அடுத்த இடத்தில் வருகின்றது. தாயின் 'ஆராரோ ஆரிரரோ பாடலில்தான் குழந்தை இலக்கியம் அறிமுகமாகிறது. ஆங்கில அறிஞர் ஆட்டோ யெஸ்பர், 'நாக்குதான் குழந்தைக்கு மிகவும் பிடித்த விளையாட்டுக் கருவி' என்று கூறுகிறார். இவர் கூற்று குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இசைக்கு மயங்காதார் இப்பூமியில் எவருமிலர் அவ்வகையில் குழந்தை தாலாட்டினைக் கேட்டவுடன் அழுகையை நிறுத்தி விடுகிறது. பாட்டைப் பாடும் மற்றும் கேட்கும் சிறுவர்களுக்கு ஒருவிதமான இன்பம் ஏற்படுகிறது. பாட்டால் மனதிற்குள் மகிழ்ச்சி ஏற்படுகிறது. உடலுக்கு உறுதி ஏற்படுத்துகிறது. நீதிக்கருத்துக்களைப் பாட்டில் கேட்கும்போது உள்ளம் தெளிவு பெறுகிறது. அறிவு விரிவடைகிறது. பாடலின் கருத்துகள் குழந்தைகளின் மனதில் ஆழப் பதிந்து நீங்காத தன்மையைப் பெறுகின்றன. தமிழ் சிறுவர் இலக்கியம் என்பது தமிழ் மொழியில் உள்ள சிறுவர் இலக்கியம் பண்டைத்தமிழ் இலக்கியத்தில் ஆங்காங்கே சில படைப்புக்கள் சிறுவர்களுக்கு ஏற்றதாக இருந்ததென்றாலும், 19ஆம் நூற்றாண்டிலேயே சிறுவர்களை வாசகர்களாகக் கொண்ட இலக்கியங்கள் பெரிதும் தோன்றின. ஆதலால் 20-ஆம் நூற்றாண்டில் சிறுவர் இலக்கியம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் மட்டும்தான் குழந்தை இலக்கியம் சிறப்புற்று இருக்கிறது. 16-ஆம் நூற்றாண்டில் ஒளவையார் ஆத்திச்சூடி மூலம் தமிழில் குழந்தை இலக்கியத்தைத் தொடங்கி வைத்தார்.