
நம்பிக்கை நகரம் கொங்கு மண்டல சாதனையாளர்களின் சக்சஸ் ஃபார்முலா
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ஆதலையூர் சூரியகுமார்
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :132
பதிப்பு :1
Published on :2025
ISBN :9789349691636
Add to Cartதொழிலதிபர்களின் வாழ்க்கை வரலாற்றை படிப்பது என்பது மாணவர்களுக்கு எப்போதுமே ஒரு ஊக்க சக்தியாக அமைகிறது. தொழிலதிபர்கள் என்று சொல்வதை விட வெற்றியாளர்கள் என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். கனவு காணும் கல்லூரி
பருவத்தில் இருக்கக்கூடிய மாணவர்கள் நேர்மறை சிந்தனை தரக்கூடிய வெற்றியாளர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பது அவர்களுடைய வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்யும். அவர்களுடைய எதிர்காலம் பற்றிய கற்பனை வானில் இன்னும் சிறகடித்து பறக்கும். வெற்றியாளர்கள் காட்டிய வழியில் பயணம் செய்தோ அல்லது அவர்கள் தந்த ஊக்கத்தில் பயணம் செய்தோ மாணவர்களும் எதில்காலத்தில் வெற்றிக் கொடி நாட்டுவார்கள். அந்த அடிப்படையில் கொங்கு மண்டலத்தில் வெவ்வேறு துறைகளைச் சார்ந்த பதினொரு வெற்றியாளர்களின் வரலாற்றை தொகுத்து இந்த நூல் எழுதப்பட்டுருக்கிறது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு ' எலக்டிவ்' பாடமாக வைக்க வேண்டும் என்று ஏற்கனவே ஆட்சிப் பேரவையில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. மாணவர்கள் மட்டுமல்ல தாங்கள் சார்ந்த துறையில் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பார்களும் இந்த நூலை வாசிக்கலாம்.
