நவசெவ்வியல் பொருளியல்
₹425+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். நீலகண்டன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :532
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789391093815
Add to Cartஅறிவொளிக் காலத்தில் தோன்றிய செவ்வியல் அரசியல் பொருளாதாரக் கொள்கை
ஆடம் ஸ்மித் கைகளில் பொருளியல் என்ற தனி இயலாக உருப்பெற்றது. அவருடைய
வழிவந்த கார்ல் மார்க்ஸ் பொருள் மதிப்பை உருவாக்குவது தொழிலாளரின் உழைப்பே
என்றார். . ‘ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை’ என்ற நூலில் செவ்வியல்
அரசியல் பொருளாதாரத்தை விரிவாக அறிமுகப்படுத்திய பேராசிரியர் எஸ்.
நீலகண்டன் இந்நூலில் நவசெவ்வியல் பொருளியலை அதே ஆற்றொழுக்கான நடையில்
தெளிவாக அறிமுகப்படுத்தியுள்ளார். உயர்கல்வி மாணவர்கள் மட்டுமல்லாமல் பொது
வாசகர்களும் எளிதில் புரிந்துகொள்ளும்வகையில் அவர் எடுத்துக்காட்டும்
உதாரணங்கள் நம் அன்றாட வாழ்க்கையிலிருந்து பயில்வதற்கும்
பயிற்றுவிப்பதற்கும் இந்நூல் அரியதொரு கைவிளக்காகும். “ஏன், எதற்கு, எப்படி
என்ற முடிவுறா வினாக்களை மனித குலம் எழுப்பியே தனது அறிவுப்புலங்களைக்
கட்டமைத்துள்ளது. இவ் வினாக்களுக்கு ஒற்றைப் பதில் இருந்தால் அப்புலம்
தேங்கிவிடும். பொருளியல் புலமும் இதற்கு விலக்கல்ல. காலந்தோறும் பல்வேறு
அறிஞர்கள் இத்துறைக்கு அறிவுச் செல்வத்தை வழங்கிச் சென்றுள்ளனர். இத்தகைய
அறிஞர்கள் பற்றி முழுவதும் அறிந்துகொள்வது இக்கால மாணவர்களுக்கும் பொது
வாசகர்களுக்கும் மிகவும் தேவை. அத்தேவையை உணர்ந்து அதற்கெனக் கடுமையாக
உழைத்து, தமிழில் நூல்களை வெளிக்கொணரும் அரிய பணியைப் பேராசிரியர்
நீலகண்டன் சிறப்பாகச் செய்துவருகிறார். நெருடல் இல்லாத தமிழில்
எடுத்துக்காட்டுகளோடு, சிறந்த பல்வேறு பொருளியல் சிந்தனைகள் பற்றிய
அறிமுகத்தை வழங்குவது பேராசிரியர் நீலகண்டனின் தனிச்சிறப்பு.”