book

உறவுப் பாலங்கள்

Uravu Paalangal

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ் நிவேதா
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

உறவுப் பாலங்கள் - மாலைக் காற்று சிலுசிலுவென வீசிக் கொண்டிருந்தது. மண் சாலை யின் இரண்டு பக்கமும் கண்ணுக் கெட்டியவரை நெற்பயிர்கள் பச்சைப் போர்வையை விரித்திருந்தன. வயலை ஒட்டிச் சென்ற அம்பராம் பாளையம் ஆற்றில் வாத்துகள் குழந்தைகள் மிதக்க விட்ட பொம்மைகளைப் போல் மிதந்து கொண்டிருந்தன. இரை தேடிக் கிளம்பிய பறவைகள் தங்கள் கூடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. வயலில் வேலையை முடித்துவிட்டுக் கூலியாட்கள் பேசியபடியே தங்கள் வீடுநோக்கிச் சென்று கொண்டிருந்தனர். தன் பைக்கில் அவர்களைக் கடந்து சென்ற சங்கரன் நினைத்தார். உலக நியதி இதுதான் போலும். பொருள் தேடும் பொருட்டு இருப்பிடத்திலிருந்து கிளம்பிப் போய்ப் பொருளைத் தேடி மீண்டும் இருப்பிடம் சேர்வது எல்லா உயிர்களுக்கும் பொதுவான செய்கைதான் என யோசித்தபடியே தன் வீட்டு வாயிலில் வண்டியை நிறுத்தினார். சமையலறையில் வேலையாய் இருந்த வேணி, வனின் பைக் சத்தம் கேட்டதும் தண்ணீர்ச் சொம்புடன் வெளியே வந்தாள். கை, கால்களைக் கழுவிக் கொண்டு ஒரு வாய்த் தண்ணீரைக் குடித்த சங்கரன், "வானதி எங்கே?” என்றார் சுற்றிலும் பார்த்து. "மலர்க்கொடியைப் பார்க்கப் புரவிபாளையம் போயி ருக்கிறாள்," என்றாள் வேணி. "மலர்க்கொடி இங்கிருந்து போய் இரண்டு நாள்தானே ஆகிறது!" என்றார் சங்கரன் கேள்வியுடன் பார்த்து. 'அக்காவைப் பார்க்கணும்னு பிரியத்தோடு போயிருப்பா. இதுக்கெல்லாம் நாள் கிழமை பார்க்கணுமா?” என்றாள் வேணி.