
தென்னங்காற்று
Thennankaatru
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வித்யா சுப்ரமணியம்
பதிப்பகம் :இராமு நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :224
பதிப்பு :2
Published on :2012
Out of StockAdd to Alert List
எந்தவிதப் பத்திரிகை நிர்பந்தமுமின்றி நான் எழுதிய நாவல் இது. என் எண்ணச் சிதறல்களை மிகச் சுதந்திரமாய்ப் பிரசவித்திருக்கிறேன். எழுதி முடித்துச் சில மாத காலங்கள் கழித்துப் படித்துப் பார்த்தபோது நானே சில இடங்களில் நெகிழ்ந் ததும், கண்கலங்கியதும் நிஜம். நண்பர் பழனிவேல் இந்நாவலுக்கு முன்னுரை எழுதி உள்ளார். என் எழுத்தின் மீது மிகவும் நம்பிக்கை கொண்டவர் இவர். என் எழுத்துக்கள் பிரசுரமாவதற்கு முன்பே, படித்துப் பாராட்டி வாழ்த்தியவர். இவரது முன் னுரை என்னை வியப்பிலாழ்த்தியது. ஏனெனில் எந்த இடத்திலும் குறையே சொல்லவில்லை. அதனால் நாவலில் குறையே இல்லை என்று அர்த்தமல்ல. ஒருக்கால் அவர் அதைப் பெரிய குறையாய் நினைக்காமலிருக்கக் கூடும். ஒன்று மட்டும் உறுதி. திரு. பழனிவேல் லேசில் பாராட்டி விடும் நண்பரல்ல. பாலகுமாரனையும், ஜானகி ராமனையும் ஊன்றிப் படித்து விமர்சிப்பவர். தற்கால மாத நாவல்களின் தரம் குறைந்து வருவது குறித்து மிகவும் கவலைப்படுபவர்.
