book

தமிழ் இதழியல் வரலாற்றில் திரு.வி.க.

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ந. ஆனந்தி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :198
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

தமிழ் மொழியின் வரலாற்றிலும் இதழியல் வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க இதழாக விளங்குவனவற்றுள் தேசபக்தன், நவசக்தி என்ற இரு இதழ்களும் அடங்கும். இவ்விரு இதழ்களும் திருவிசுவால் தொடங்கப்பட்ட இதழ்கள், ஆங்கில ஆட்சிக்கு எதிராகக் குரல்கொடுத்து விடுதலை உணர்வூட்டிய இதழ்களாக இவை உள்ளன. இவை நாட்டு நலனையும் மக்கள் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு நடைபெற்றன. இதழ்களின் உயிரோட்டமாக விளங்குவது தலையங்கப் பகுதியாகும். தலையங்கங்கள் தனிமனிதனுக்கும் நிறுவனங்களுக்கும் அரசியலார்க்கும் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் உலகத்திற்கும் பயன்படுவனவாகவும் வழிகாட்டியாகவும் அமைய வேண்டும். இவ்வகையில், நாளை தலைப்பு என்ன? நாட்டில் நிலவும் பிரச்சனைகளுக்கு இதழ் என்ன தீர்வு கூறுகிறது -என்று அரசியலாளர்களும் பொதுமக்களும் ஆவலோடு எதிர்நோக்கும் ஒரு பகுதியாக திருவிகவின் தலையங்கங்கள் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது திரு.வி.க.வின் தலையங்கங்கள் என்னென்ன கருத்துகளில் வெளிவந்தன? திருவி.காவின் தலையங்க நடை, தனித்தன்மை இவற்றை ஆராய்ந்து விளக்குவதாக இந்நூல் அமைகிறது.