book

நமது ஆன்மிகப் பண்பாடுகள்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜனகன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2008
Add to Cart

நேற்றின் மீது தான் நாம் நின்று கொண்டிருக்கிறோம். பலகோடி மூதாதையரின் உழைப்பால் அமைந்த உலகம் இது. காடு திருத்தி, கழனியாக்கி, வாய்க்கால் வெட்டி நீர் பாய்ச்சி, வரி விதித்து, நாடு காத்து, சமயம் போற்றி, கலைகள் வளர்த்து, பாதுகாப்புக்கு அரண் அமைத்து, சந்ததி பெருக்கி, செல்வம் சேர்த்து,…. நமது முன்னோர் நடை பயின்ற அதே பாதையில் தான் நாமும் நடை பயில்கிறோம். பண்பாடும் அதன் ஓர் அம்சமே.
நமது பண்பாடு மிகப் பழமையானது என்பதற்கு நால் வேதங்களும் சங்க இலக்கிய தமிழ் நூல்களுமே ஆதாரம். மிகப் பண்பட்ட சமுதாயத்திலிருந்து மட்டுமே இத்தகைய அற்புதமான இலக்கிய வளம் தோன்ற முடியும். ‘நல்லது செய்தல் ஆற்றிராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்’ (புறம்- 195) என்று பாடுவார் சங்கத் தமிழ்ப் புலவர் நரி வெரூஉத் தலையார். என்ன ஒரு உயரிய கருத்து. பிறரை காஃபிர் எனவும் பாவி எனவும் அழைக்கும் ‘செமிட்டிக்’ மதநேயர்களுக்கு இந்த எண்ணம் நெஞ்சில் முளைக்குமா?