book

உயர் மனிதனை உருவாக்கும் குணங்கள்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.எஸ். உதயமூர்த்தி
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :124
பதிப்பு :37
Add to Cart

உயர் மனிதனை உருவாக்கும் குணங்கள் யாவை? என்று பலகாலம் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வோர் சமயத்தில் - நமது தேவைக்கேற்ப- ஒவ்வோர் குணங்கள் மிக முக்கியமானதாகப் படும். சிலர் என்னை ஏமாற்றியபோது மனிதர்களை சரியாக எடைபோடும் குணம்தான் மிக முக்கியம் என்று நான் கருதினேன். பிரச்சனைகளில் எந்த முடிவு சரியானதாக இருக்கும் என்று தவிக்கும்போது பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதுதான் மிக முக்கியமானதாகத்தோன்றும். சிலர் வந்தவுடன் அந்த இடமே கலகலப்பு பெறுவதைப் பார்க்கும்போது  பழகுந்தன்மைதான் மிக முக்கியம் என்று எண்ணுவதுண்டு. கம்பீரம், ஒரு தலைவனுக்கான கவர்ச்சி, எதையும் நுணுகி ஆராயும் புத்திசாலித்தனம், ஆக்கசக்தி படைத்த மனம், திரிகால ஞானியாக இருக்கும் யோகியின் இயல்பு என்று இப்படிப் பலபல குணங்கள் மனித வாழ்க்கைக்கு, வெற்றிக்கு, மகிழ்வுக்கு, நிறைவுக்கு தேவைப்படுகின்றன.