book

கௌதம புத்தர் வாழ்க்கையும் உபதேசமும்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜனகன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :156
பதிப்பு :2
Published on :2004
Add to Cart

கௌதம புத்தரை அடிப்படையாகக்கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். கௌதமபுத்தர் கிறித்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் “சித்தார்த்த கௌதமர்” என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார்.
புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்த பிக்குகள் மனனம் செய்துவந்தார்கள். அவற்றுள் மிக முக்கியமானதாக தம்மபதம் விளங்குகிறது, பிற மத நூல்களைப் போன்று அல்லாமல் இந்நூல் மக்களின் சாதாரண பேச்சு வழக்கில் உருவாக்கப்பட்டது. மேலும் எளிய நடை இதன் சிறப்பம்சம் ஆகும். குரு - சீட பரம்பரையூடாக வாய்மொழி மூலம் கடத்தப்பட்டுவந்த இத் தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர் திரிபிடகம் என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது