
தமிழாளுமைகள் புனைவும் அபுனைவும்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. அறிவரசன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :194
பதிப்பு :1
Published on :2019
Add to Cart'தமிழாளுமைகள் : புனைவும் அபுனைவும்' என்னும் இந்நூல் சங்ககாலப்
பெண் கவிஞரான மாறோக்கத்து நப்பசலையார் முதல் சமகாலப் பெண் கவிஞரான அ.
வெண்ணிலாவரை பத்துக் கவிஞர்களைப் பற்றிய தொகுப்பு நூலாகும். இத்தொகுப்பில்
மாறோக்கத்து நப்பசலையாரின் மொழிநடை, திருவள்ளுவரின் கல்வியியல் சிந்தனைகள்,
தந்தை பெரியாரின் தமிழ்மொழியும் அதன் இலக்கியமும், பாரதியின் கல்வி
நெறிகள், ரா.பி. சேதுப்பிள்ளையின் தமிழ்த் தொண்டு, வ.வே.சு. ஐயரின்
நாட்டுப்பற்று, கலைஞர் மு. கருணாநிதியின் கருத்துப் புலப்பாடு, இரா.
பாலசுப்பிரமணியனின் காந்தியம், மு. தமிழ்க்குடிமகனின் தமிழ்மொழி மேம்பாடு,
அ. வெண்ணிலாவின் 'மரணம் ஒரு கலை' ஆகியன உள்ளடக்கமாக அமைந்துள்ளது.
இக்கட்டுரைகள் நான் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர்பட்ட
ஆய்வாளராக (2004) இருந்த காலத்திலிருந்து இன்றுவரை (2019) அறக்கட்டளைச்
சொற்பொழிவுகளில் பேசியதும், கருத்தரங்கிற்காக எழுதியதும் நூலாக்கம்
செய்யப்பட்டுள்ளது. எனவே, என்னை அறக்கட்டளைச் சொற்பொழிவுக்கு அழைத்த
தமிழாராய்ச்சி நிறுவனங்களுக்கும், கருத்தரங்கிற்குக் கட்டுரை எழுத
ஊக்கப்படுத்திய கல்வி நிறுவனங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
