book

சுருதி சேராத ராகங்கள்

Sruthi Seratha Raagangal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :87
பதிப்பு :16
Published on :2013
ISBN :9788184020366
Add to Cart

கண்ணதாசனின் ‘சுருதி சேராத ராகங்கள்’ படித்தேன். நான்கு மாறுபட்ட குடும்பத்தில் நடக்கும் பாலியல்தான் கதைக்களம்.
முதல் குடும்பம். கணவனின் உடல் பசிக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவிக்கிறாள் மனைவி. என்னதான் அவர்களுக்குள் நெருக்கத்தில் குறைவில்லையென்றாலும்; இரவில் கணவனின் கணம் மனைவிக்கு தாங்கமுடியாத வலியைக் கொடுக்கிறது. கணவனின் உடல் பசிக்கு மட்டுமாவது ஒருத்தி தேவை என தேடுகிறாள்.இரண்டாவது குடும்பம். பல நாள் பேசாமல் இருந்த மனைவியிடம் தானே பணிந்து பேச ஆரம்பிக்கிறான் கணவன். அதனைத் தொடர்ந்து கணவன் மனைவி இருவரும் தன் தவறுகளை உணர்ந்து பேச ஆரம்பிக்கின்றார்கள். மனைவி கர்பமாகிறாள். கணவனுக்கு; அவனையும் மீறிய சந்தேகம் எழுகிறது. இதற்கு முன்பு வரை மனைவி செய்த்தெல்லாம், இப்போது சந்தேகத்தை ஆழப்படுத்துகிறது. குத்தலாக பேச ஆரம்பிக்கும் கணவனின் சந்தேகம் மனைவியை மேல்மாடியில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு செல்ல காரணமாகிறது.