book

சொற்கலை விருந்து சொற்களின் சரிதம்

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். வையாப்புரிப் பிள்ளை
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :186
பதிப்பு :1
Published on :2019
Add to Cart

உலகில் தோன்றிய மொழிகளுள் சொல்வளம் மிக்க மொழியாகத்திகழ்வது தமிழ்மொழி.அதனுடையதொன்மையும் தூய்மையும் காலப்போக்கில் ஏற்பட்ட வளர்ச்சியும் இத்தகைய சொல்வளத்துக்குக் காரணமாகலாம். இதனால் பல தமிழ் சொற்களைப் பிறமொழியினர் வழக்காறாகக் கொண்டுள்ளனர். இதனை மொழியியல் ஆய்வாளர்கள் நன்கு அறிவர். அந்த வகையில் தமிழில் வழங்கப்படும் சில சொல்களைத் தேர்வு செய்து அவற்றின் தோற்றம் மற்றும் வளர்ச்சி நிலையை அகச் சான்றுகளோடு ஆய்வு செய்து வெளிப்படுத்தும் ஆய்வு நூலே இந்தச் சொற்களின் சரிதம் என்னும் நூல். கழகம், களம், கண்வட்டம், பொழுது, முன்னிலைப்பெயர், தோடு, விருந்து, கந்தருவர், பஞ்சம், சாதுகை மாந்தர் போன்றவற்றின் ஆய்வாக இந்த நூல் அமைந்துள்ளது.
தமிழ் ஆய்வுலகில் நுட்பமான புரட்சிகரமான ஆய்வுகளைச் செய்தவர் எஸ். வையாபுரி பிள்ளை அவர்கள். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து ஓய்வுபெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வெளியீடான லெக்சிகன் என்னும் பேரகராதியின் ஏழு தொகுதிகளைப் பதிப்பித்தவர் என்ற பெருமைக்குரியவர். அவருடைய உழைப்பைப் பாராட்டி அப்போதைய இந்திய அரசு 1936இல் இராவ்சாகிப் பட்டமளித்துப் பாராட்டியது. நாப தீப நிகண்டு, அரும்பொருள் விளக்க நிகண்டு, பொதிகை நிகண்டு, கயாதர நிகண்டு ஆகியவற்றை ஆய்வு செய்து பதிப்பித்தவர். திருவனந்தபுரம் புத்தன் சந்தையில் மகாகவி பாரதியரைச் சந்தித்தவர். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையுடன் நெருங்கிப் பழகியவர். மறைமலையடிகளின் மாணவர். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணீயத்தைப் பதிப்பித்து வெளியிட்டவர்.