book

இணையற்ற இந்திய இளைஞர்களே

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :40
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788123436586
Add to Cart

மலைத்தோட்ட விவசாயிகளின் முக்கியப் பிரச்னையே வனவிலங்குகளும், இயற்கைச் சீற்றங்களும்தான். இதன் காரணமாக எதையும் உருப்படியாக விளைவிக்க முடியாமல் சிக்கித் தவித்த விவசாயிகளுக்கு தற்போது நன்கு கைகொடுத்து உதவி வருகிறது பசுமைக்குடில் விவசாயம்.

அதையும் இதையும் ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்து வந்த பலரும் தற்போது பன்னிரண்டு சென்ட் அளவுக்கு பசுமைக்குடில் அமைத்து ஜெர்பரா, கார்னேஷன், ரோஜா போன்ற கொய் மலர்களையும்... கேப்ஸிகம் என்னும் குடைமிளகாயையும் சாகுபடி செய்து வருகின்றனர்.

பெரும்பாலான விவசாயிகள் பலவிதமான செயற்கை உரங்களைப் பயன்படுத்தித்தான் பசுமைக்குடிலுக்குள் பயிர்செய்து வருகின்றனர். ஆனால், திண்டுக்கல் மாவட்டம், கொடைக் கானல் பகுதியில் முதல்முறையாக பசுமைக்குடிலுக்குள் இயற்கை விவசாயத்தைப் புகுத்தி கொய்மலர்களையும், குடைமிளகாயையும் சாகுபடி செய்து சாதனை படைத்து வருகிறார் ஜெயக்குமார்.

திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் மலை மீது குறுக்கிடுகிறது ஊத்து. இந்த சிறு கிராமத்திலிருந்து வலதுபுறம் பிரிந்து செல்லும் சாலையில் நான்காவது கிலோ மீட்டரில் இருக்கிறது பண்ணைக்காடு. கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ மூன்றாயிரத்து எண்ணூறு அடி உயரத்திலிருக்கும் கிராமம். இங்கும், இதையடுத்திருக்கும் வடகரைப்பாறையிலும் பசுமைக் குடில்கள் அமைத்து விவசாயம் செய்து வருகிறார் ஜெயக்குமார் (அலைபேசி: 94436-77673).

அவரைத் தேடிபோனபோது, ''பசுமைக்குடில் மட்டும்தான் நவீனம். உள்ளுக்குள் நடக்கிற விவசாயமெல்லாம் பாரம்பரியம்தான்'' என்று பளீர் சிரிப்புடன் வரவேற்றவர், கடகடவென பேச ஆரம்பித்தார்.

''பண்ணைக்காடுதான் எங்க சொந்த ஊர். என்னோட அப்பா ஆசிரியரா இருந்தார். நான் டி.-பார்ம் படிச்சி முடிச்சிட்டு, உள்ளுரிலேயே மருந்துக் கடை நடத்திக்கிட்டிருக்கேன். எங்களுக்கு இருந்த பூர்வீக நிலத்துல ரொம்ப வருஷமா காபிதான் போட் டிருந்தோம். ஆனா, அதுல பெரிய அளவு வருமானம் இல்லாததால நான் விவசாயத்துல ஆர்வம் காட்டாம இருந்தேன். பாகப்பிரிவினையில் எனக்கு கொஞ்சம் தோட்டம் பிரிச்சு கொடுத்தாங்க. அதுக்கப்புறம், விவசாயம் பண்ணலாம்னு எனக்கு ஆசை வந்து, அதைப்பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன்.