
படுகளம்
₹700
எழுத்தாளர் :ப.க. பொன்னுசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :573
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788123440767
Add to Cart'படுகளம்" அற்புதமாகப் பின்னப்பட்டுள்ள நாவல். பள்ளிபுரம் கிராமத்தை வைத்துப் பாரதத்தின் விவசாய உலகத்தையே நம்முன் விரிக்கும் சித்து. இனி நாம் ஒவ்வொரு தேக்கரண்டி சர்க்கரையை டம்ளரில் போடும் போதும் இந்த நாவல் கண் முன் நிற்கும்.
தாய்மொழியைத் தாரை வார்த்துவிட வேண்டாம் என்று ஆயிரம் அரங்குகளில் முழங்குவதை விட இப்படியொரு சிறந்த தமிழ் நாவலை எழுதி பொன்னுசாமி தமிழுக்காக இனிய சேவை செய்திருக்கிறார் என்பதே உண்மை.
- டாக்டர் பிரேமா நந்தகுமார்
வாசகர்களைக் கட்டிப்போடும் வசீகரக் கொங்கு நடை இந்நாவலின் பெரிய பலம். ஜிலுஜிலுவென்று அந்த நடை நாவலெங்கும் தேனோடையாய்ப் பாய்கிறது. நாவலை வாசித்து முடித்ததும் நம் மனத்தில் எழும் சிந்தனைகள் நம்மை மேம்படுத்துகின்றன. ஒரு பெரிய வாழ்க்கையை நாமே வாழ்ந்து முடித்தது மாதிரியான மனநிறைவு நம்மிடம் தோன்றுகிறது. தமிழ் நாவல் இலக்கியத்தில் கொங்கு நாவல் துறையை வளப்படுத்தும் இந்தப் படைப்பு, முத்திரை பதிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க படைப்பு என்பதில் சந்தேகமில்லை.
- டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன்
