book

நாரதர் கதைகள்

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.வி. பதி
பதிப்பகம் :குறிஞ்சி பதிப்பகம்
Publisher :Kurinchi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

ஒருமுறை பூலோகத்துக்கு வந்தார் நாரதர். அருகிலுள்ள ஊரில் சிவாலயம் ஒன்றிருந்ததை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த அவர் அங்கு செல்ல முடிவெடுத்தார். கடும் வெயிலடித்தது. எனவே, வண்டியில் சென்றால் நல்லதே என தன் சக்தியால் ஒரு குதிரை வண்டியை வரவழைத்தார். வண்டியோட்டி வண்டியைக் கிளப்பினான். சற்று தூரம் சென்றதும், ஒரு மனிதன் வண்டியை நிறுத்தினான். அவன் ஏழை மட்டுமல்ல, முட்டாளும் கூட. ஆன்மிகமெல்லாம் அவனுக்கு தெரியாது. வண்டியில் இருப்பது நாரதர் என்பதை அவன் அறியமாட்டான்.  ஐயா! வெயில் கடுமையாக இருக்கிறது. நீர் வண்டியில் தானே போகிறீர்! உமது பாதரட்சையை எனக்கு கொடுத்தால் நடந்து செல்ல சிரமம் இருக்காது, என்றான். நாரதர் அவன்மேல் இரக்கப்பட்டு பாதரட்சையைக் கொடுத்தார். அவன் அதை அணிந்து கொண்டு, ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அதோடு விட்டானா!