
மேற்கிலும் மறையாத சூரியன்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கிருஷ்ணசாமி இரகுநாதன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :158
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788197245824
Add to Cart'கலைஞர்' எனும் ஒறைறைச் சொல் பல்வேறு உணர்வுகளை உள்ளத்தில் எழுப்ப வல்லது. எந்தவிதமான குடும்ப பின்புலமோ, அரசியல் பின்புலமோ, சமுதாய பின்புலமோ இல்லாத ஒரு தனி மனிதர். எழுத்து, பேச்சு, நடிப்பு, நாடகம், கதை, கவிதை, கட்டுரை, திரைக்கதை, வசனம், வரலாற்றுப் புதினங்கள், இலக்கியம், உள்ளூர் இலக்கியங்கள் முதல் உலக வரலாறு வரை அறிந்துள்ள அறிவாற்றல், பத்திரிகை ஆசிரியர், பத்திரிகை நிறுவுநர், அரசியல், ஆளுமைத்திறன், துரோகங்களை தூள் தூளாக்குவது, தோல்வியில் துவண்டு விடாமல் மீண்டெழுவது, சட்டமன்ற வரலாற்றில் தோல்வியே காணாமல் சட்டமன்ற உறுப்பினர், எதிர்க்கட்சித் துணைத்தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர், முதல்வர்,மேலவை உறுப்பினர். என ஆளுங்கட்சியோ அல்லது. எதிர்க்கட்சியோ எல்லா நிலைகளிலும் திறம்பட பணியாற்றிய மூத்த அரசியல் ஆளுமை, உறுதியான கொள்கைப் பிடிப்பு, சிந்தனைத் திறன்,முன்னோக்கும் பார்வை, அபரிதமான நினைவாற்றல்... என முடிவில்லாமல் தொடரும் இந்தப் பட்டியலில், எப்படி ஒருவரால் தான் தோன்றிய துறைகள் எல்லாவற்றிலும் தன்னை மேம்படுத்திக் கொள்ளவும் முன்னிறுத்திக் கொள்ளவும், திமிர்ந்த ஞானச் செருக்குடன் தொடர்ந்து பயணிக்க முடியும் என்பது விஞ்ஞான விந்தைக்கும் அப்பாற்பட்டது.
